அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பாணை

456 0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

சாட்சியமளிப்பதற்கான இன்று முன்னிலையாகுமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய இந்த அழைப்பாணையை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி பிணை முறி வெளியீட்டின் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.