இலங்கை தூதரகத்தின் எதிர்ப்பையும் மீறி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி

194 0
image

கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள  இலங்கை தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இலங்கை தூதரகம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் எதிர்ப்பையும் மீறி பிரம்படன் மேயர் பட்ரிக் பிரவுன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவதற்கான தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

இன்னுமொரு மாநகரசபையிடம் இதேபோன்ற ஒரு நினைவுத்தூபியை அமைப்பதற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளை மேயர் நிராகரித்துவிட்டார் என இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக தீவிரவாதிகள்வேறு பெயர்களில் செயற்படுகின்றனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.