கஜேந்திரன் உட்பட்டோர் சட்டவிரோதமான கைதுக்கு ஈழத்தமிழர்பேரவை -பிரித்தானியா வன்மையாகக் கண்டிக்கிறது.

164 0

 

யாழ்ப்பாணம் தைட்டியில் இன்று 23ஆம் திகதி பெளத்த மயமாக்கலுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டோர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை ஈழத்தமிழர் பேரவை -பிரித்தானியா வன்மையாகக் கண்டிக்கிறது

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரியும், இராணுவத்தினதும், சட்டவிரோத திஸ்ஸ விகாரையினதும் ஆக்கிரமிப்பிலுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும் தையிட்டியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் சனநாயக வழிகளில் போராடிய பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராஜா கஜேந்திரன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு இன்று நடத்திய மிருகத்தனமான கைது நடவடிக்கையை கண்டித்து ஈழத்தமிழர் பேரவை -பிரித்தானியா வன்மையான கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியீடு செய்துள்ளது.

இவ்வறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அமைதிவழியில் போராடிய பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரனுக்கும் மற்றும் ஏனையோர்க்குக்கும் எதிரான சிங்கள பேரினவாத அரசு எடுத்துள்ள மிருகத்தனமான நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டும் சிங்கள அரசின் இது போன்ற கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச சமூகத்தினரை அழைக்க இருக்கின்றோம் என்றும் ஈழத்தமிழர் பேரவை -பிரித்தானியா தெரிவித்துள்ளது