புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையிலுள்ள 5 ஹோட்டல்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

80 0

புறக்கோட்டை  ஒல்கொட் மாவத்தையில் இயங்கிய 5 ஹோட்டல்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனியின் ஆலோசனையின் பிரகாரம், புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் உள்ள ஹோட்டல்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோதனையை மேற்கொண்டனர்.

இதனையடுத்து மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில்  இது தொடர்பில் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதனையடுத்தே சுகாதாரத்துக்கு கேடான 5 ஹோட்டல்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.