இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய மத போதகருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள்

125 0

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இலங்கை திரும்பிய பின்னர் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கு கையளிக்கப்படுவதற்கு முன்னர் அவர் கைது செய்யப்படுவார் எனவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அமலாக்கச் சட்டத்தின் சர்வதேச உடன்படிக்கையின் கீழ் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

பல வருடங்களுக்கு முன் பேயவா என்ற பிரபல மருந்து விற்கும் விளம்பரத்தில் நடிகராக தோன்றி தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெரோம் பெர்னாண்டோ, பின்னர் பெரும் பணக்காரராகவும், போதகராகவும் மாறினார்.

எனினும் அவர் அண்மையில் புத்தர் தொடர்பில் கூறிய கருத்து தற்போது பலத்த சமூக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை, சட்டவிரோதமான சொத்துக்களைப் பெற்றமை, பண மோசடி செய்தல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் ஜெரோம் பெர்னாண்டோ மீது சுமத்தப்படவுள்ளன.

கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் இருந்த அவர் இன்று நாடு திரும்புவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.