ரக்பி வீரர் வசிம் தாஜூதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட் பிரதி காவல்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டிய காவல்நிலைய குற்ற விசாரணை பிரிவின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரி சுமித் ஷம்பத் ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இவர்களை எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்.
இந்த கொலை தொடர்பான தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் கீழ், நாரஹேன்பிட்டிய காவல்நிலைய குற்ற விசாரணை பிரிவின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரி சுமித் ஷம்பத் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அந்த விசாரணையின் ஒரு நடவடிக்கையாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட் பிரதி காவல்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- ரக்பி வீரர் கொலை – சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.
September 13, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025