காணாமல்போனோர் தொடர்பில் சுமந்திரனிடம் கேட்க முடியாது – சித்தார்த்தன்

212 0

காணாமல்போனோர் தொடர்பில் சுமந்திரனிடம் கேட்கமுடியாது என நான் கூறியது . அந்தக் காலத்தில் சுமந்திரன் அரசியல் செயல்பாட்டிலேயே இருக்கவில்லை என்ற உண்மையின் அடிப்படையிலேயே என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,

காணாமல்போனோர் தொடர்பில் சுமந்திரனிடம் கேட்க முடியாது என நான் கூறியது . அந்தக் காலத்தில் சுமந்திரன் அரசியல் செயல்பாட்டிலேயே இருக்கவில்லை என்ற உண்மையின் அடிப்படையிலேயே கூறினேன்.

அதாவது கடந்த ஆண்டு யாழிற்கு ஐ.நா. ஆணையாளர் வந்தபோது கூட்டமைப்பினருடன் ஓர் சந்திப்பு இடம்பெற்றது. இதேநேரம் வெளியில் காணாமல் போனோரின் உறவுகள் ஓர் ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயம் கூட்டம் முடிந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறிக்கொண்டிருந்த சமயம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் உரையாடினார். அதனை அவதானித்த நானும் அங்கு சென்றேன்.

அதன்போது அங்கிருந்த தாய்மாரில் சிலர் காணாமல்போனோர் தொடர்பில் சம்பந்தனும் சுமந்திரனும் பதில் கூறவேண்டும் எனக் கோரியிருந்தனர். சந்திப்பு முடிந்து வெளியேறும்போது நான் சுமந்திரனிடம் தெரிவித்தேன். காணாமல்போனோர் தொடர்பில் உங்களிடம் கோர முடியாது. வேண்டுமானால் எம்மிடம் கோரலாம். என.

அதாவது காணாமல்போகச் செய்யப்பட்டது அனைத்தும் 2009ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்பாகவே ஆனால் சுமந்திரன் அரசியலுக்கு வந்த்து 2010ன் பிற்பாடு ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட காலத்திலும் நாம் அரசியலில் உள்ளதனால் எம்மிடம் கேட்பதில் நியாயம் உண்டு.

சம்பவத்திற்குப் பிற்பாடு வந்தவரிடம் கேட்பதில் நியாயம் அற்றது. என்றே கூறினேன். ஏனெனில் அது தொடர்பில் சுமந்திரனுக்கு தெரிந்திருக்கவோ அல்லது அது தொடர்பான அறிவு இருக்கவோ வாய்ப்பில்லை.

இதேநேரம் காணாமல் போனவர்கள் தொடர்பில்  ஆயுதக் குழுக்களாகவும் ஆயுதக்குழுவாக இருந்து அரசியலுக்கு வந்த எவர்களாக இருந்தாலும் அதாவது எந்த ஆயுதப் போராட்ட இயக்கமாக இருந்தாலும் அது விடுதலைப் புலிகள் உட்பட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கு அவர்களே பொறுப்பு கூறவேண்டும். என்றார்.