சரண குணவர்தனவின் வழக்கு விசாரணை ஜூலை 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு !

114 0

முன்னாள் பிரதியமைச்சரான சரண குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின்  தலைவராக செயற்பட்டபோது அதன் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அவரது சட்டத்தரணிகள் உயர் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (16) ஆரம்ப ஆட்சேபனைகளை சமர்ப்பித்தனர். 

வழக்கு விசாரணைக்கு முந்திய மாநாட்டுக்கு அழைக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட  சரண குணவர்தன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க இது தொடர்பான ஆரம்ப ஆட்சேபனையை முன்வைத்தார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றும் போது வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை  துஷ்பிரயோகம் செய்து, இலஞ்ச ஊழல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழல் குற்றத்தைச் செய்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு  சரண குணவர்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், ஜூலை 11 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.