மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கோப் அறிக்கை குறித்த விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்ட மா அதிபர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவிப்புச் செய்துள்ளார்.
கோப் விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தின் அனுதியுடன் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதன்படி சட்ட மா அதிபர் பாராளுமன்றத்துக்கு கடிதமொன்று அனுப்பியுள்ளதாகவும் சபாநாயகர் நேற்று (07) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

