கொஸ்கஹபிட்டியவில் ஒருவர் வெட்டிக் கொலை

318 0

கொக்கரெல்ல பொலிஸ் பிரிவில் கொஸ்கஹபிட்டிய பிரதேசத்திலுள்ள 47 வயது நபர் ஒருவர் நேற்று (07) மாலை 6.45 அளவில் இனந் தெரியாத சிலரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்டவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்  எனவும், இவர் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தை நடத்தி வந்துள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

காணிப் பிணக்கே இக்கொலைக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகள்  கொக்கரெல்ல பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன