கொலை முயற்சி தோல்வி: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

148 0

மிதிகம காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரை, உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்ல முற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக மிதிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் உள்ளே இருந்த போது, ​​ரீ56 துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டுள்ளனர், எனினும் துப்பாக்கி இயங்காததால் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

பின்னர் உந்துருளியில் வந்த சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.