துருக்கியில் 15 ஆயிரத்திற்கு அதிகமான பணியாளர்கள் நீக்கம்

367 0

turkey-5_2934790g_2935036fதுருக்கியில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வித்துறைச் சார்ந்த பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் அங்கு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவித்து இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் பலர் இது தொடர்பில் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அமெரிக்காவில் வசிக்கும் துருக்கியின் மதத்தலைவரான ஃபெதுல்லா குளென் என்பவரே மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

அவருடன் குறித்த கல்வி சார் பணியாளர்கள் தொடர்பில் இருந்ததாக குற்றம் சுமத்தப்படும் நிலையிலேயே இந்த பணி நீக்கம் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.