கொள்ளுப்பிட்டியில் நிலமொன்றை கொள்வனவு செய்யும் போது மோசடி

137 0

கொள்ளுப்பிட்டியில் உள்ள நிலமொன்றை கொள்வனவுசெய்யும் நடவடிக்கையின் போது இடம்பெற்ற மோசடி குறித்து சிஐடியினர்  நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனை தளமாக கொண்ட நிறுவனமொன்றின் பங்குதாரர்களிற்காக நிலமொன்றை கொள்வனவு செய்யும் நடவடிக்கையின் போதே இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

2004 இல் கொள்ளுப்பிட்டி காலி வீதியில் 219 பேர்ச் நிலத்தை கொள்வனவுசெய்வதற்கான நடவடிக்கைகளின் போது முறைகேடு இடம்பெற்றாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை கொழும்பு வர்த்தக குற்ற பிரிவினர் விசாரணை செய்துவந்தனர்.

பிரிட்டனை சேர்ந்த நிறுவனமொன்றின் பத்து பங்குதாரர்கள் குறிப்பிட்ட நிலத்தை கொள்வனவு செய்வதற்கு 1.3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்டை செலவிட்டுள்ளனர்.

2010 ஜூலையில் இந்த நிலம் விற்பனையாகியுள்ளது.

பிரிட்டிஸ் பிரஜையொருவர் (தமிழர்) மற்றுமொரு பிரிட்டிஸ் பிரஜை இந்த நில கொள்வனவில் ஏமாற்றியுள்ளார் என சிஐடியினருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலத்தினை கொள்வனவு செய்வதற்கான மையப்புள்ளியாக செயற்பட்டவர் ஏனைய பங்குதாரர்களை ஏமாற்றிவிட்டார் என அவா குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து சிஐடியினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறிப்பிட்ட நிலம் 790 மில்லியனிற்கு விற்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நவம்பரில் பிரதான சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றம் பயண தடையை விதித்திருந்தது.