காலியில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின : போக்குவரத்துக்கும் தடை!

165 0

காலியில் நேற்று வியாழக்கிழமை (04) இரவு பெய்த கடும் மழையினால் பல வீதிகள் மற்றும் தாழ்வான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

காலி பத்தேகம வீதியின் தலபிட்டிய, சரேந்துகட, தங்கேதர, பெலிகஹ மற்றும் வக்வெல்ல வீதியில் சங்கமித்த புர உட்பட பல பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்தும் தடைப்பட்டது.

இந்தப்  பகுதிகளில் உள்ள சில வீடுகள் மற்றும் கடைகளில்  இரண்டடிக்கு  வெள்ளநீர் தேங்கியுள்ளது.