வஸ்கடுவ தீ பரவலில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் !

152 0

வஸ்கடுவ பகுதியில் மர ஆலை ஒன்றில் இன்று (05) அதிகாலை தீ பரவியதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த ஏராளமான பலகைகள் எரிந்து நாசமாகின.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின்  தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ அணைப்பு நடவடிக்கைகளின் போது களுத்துறை வடக்கு பொலிஸாரும்  பிரதேச மக்களும் உதவினர்.

இந்தச் சம்பவம் காரணமாக 20 இலட்சம் ரூபா பெறுமதியான   சொத்துகளுக்குச்  சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.