உலக வங்கியின் புதிய தலைவராக, இந்தியாவில் பிறந்த அஜய் பாங்கா தெரிவு

72 0

உலக வங்கியின் புதிய தலைவராக, இந்தியாவில் பிறந்த அமெரிக்கரான அஜய் பாங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூன் 2 ஆம்  திகதி முதல் 5 வருடங்களுக்கு அவர் உலக வங்கியின் தலைவராக விளங்குவார்.

உலக வங்கியின் தற்போதைய தலைவராக டேவிட் மெல்பாஸ் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட உலக வங்கியின் தலைவராக அமெரிக்கப் பிரஜையொருவர்  பதவி வகிப்பது பாரம்பரியமாக உள்ளது.

இந்தியாவின் சீக்கிய குடும்பமொன்றில் பிறந்த 63 வயதான அஜய் பாங்கா,  2010 முதல் 2021 வரை மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்தவர்.