ஜயரத்ன ஹேரத் எம்.பி. பயணித்த டிபென்டர் விபத்தில் சிக்கியது : ஐவர் காயம்!

67 0

குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத்தின் டிபென்டர் ஜீப், வாரியபொலவில் சிறிய லொறியுடன் மோதியதில் லொறியின் சாரதி மற்றும் ஐவர் காயமடைந்து வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் எம்பிக்கு காயம் ஏற்படவில்லை எனவும் அவர் பயணித்த ஜீப்பின் சாரதி 67 வயதுடைய நபரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்   பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப்பை ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே செலுத்திச் சென்றுள்ளார்.

தனியார் வங்கிக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரக லொறி திடீரென வீதியில் சென்றதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.