யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் தினம் 2023

295 0

பல்லின மக்கள் அமைப்புகள் மற்றும் தொழிலாளர்கள் இன்றைய தினத்தில் தமது நல்ல தொழில் நிலைமைகளுக்காக போராடும் இத் தருணத்தில், வலிசுமந்த மாதத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் இந்த வாய்ப்பை எமது தாயகத்தில் நடைபெற்ற/நடைபெறுகின்ற இனவழிப்பை சர்வதேச சமூகத்தின் கவனத்தில் கொண்டுவரும் வகையில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணியில் கலந்துகொண்டனர்.

யேர்மன் நாட்டின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பேரணியில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமிழின அழிப்புக்கு நீதி கோரி , தமிழீழ விடுதலை கோசங்களுடன் போராடினார்கள்.

தமிழீழ தேசிக்கொடியுடன், தமிழின அழிப்பிற்கு நீதிகோரும் பதாதைகைளை தாங்கியது, பல்லின மக்களின் கவனத்திற்கு மிகவும் சென்றடைந்தது.

யேர்மன் ரீதியாக பல்வேறு நகரங்களில் நடைபெற்ற மேதின பேரணிகளில் தமிழ் மக்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.