தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு – யேர்மனி நெற்ரெற்றால்; தமிழாலயத்தில் நினைவுகூரப்பட்டது.

293 0

தேசத்தின் தாய் தியாகி அன்னை பூபதி அவர்களின் 35 ஆவது நினைவு வணக்க நாளை சனிக்கிழமை (29.04.2023) அன்று நெற்ரெற்றால் தமிழாலய
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் தமிழாலய ஆசிரியை திருமதி சியாமளா ரூபன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சுடர்வணக்கமும், மலர்வணக்கமும், தாயக விடுதலைக்காக தம்முயிர்களை  ஈகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழாலய ஆசிரியர் திரு ஆலாலசுந்தரம் ஞானகுமார் அவர்கள் அன்னை பூபதியம்மாவின் நாட்டுப்பற்றையும் உன்னதமான தியாகத்தையும் மாணவர்களுக்கு உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கவிதைகளோடு நிகழ்வு நிறைவுபெற்றது.