மக்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும்- சாந்தி சிறீஸ்கந்தராசா (காணொளி)

252 0

 

மக்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை மத்திய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்தார்.

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி கேப்பாப்புலவு மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையில் நேற்று கேப்பாப்புலவு மக்கள் நடத்தி வரும் போராட்ட இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, மக்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என தெரிவித்தார்.

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி கேப்பாப்புலவு மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

கேப்பாப்புலவு மக்கள் நடத்தும் தொடர் போராட்டத்தின் மூலம் தமது நிலங்களுக்குச் சென்ற பிலக்குடியிருப்பு பொதுமக்களும் நேரில் சென்று தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேப்பாப்புலவு முகாமுக்கு முன்பாக ஆறாவது நாளாக தொடர்ச்சியாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது சொந்த மண்ணில் என்ன வளம் இல்லை ஏன் இப்படி எம்மை இந்த அரசும் இராணுவம் நடத்துகின்றது. இதனால் இவர்களுக்கு என்ன இலாபம் நாம் தனி நாட்டை கேற்கவில்லை. எமது சொந்த மண்ணையே கேட்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது நிலங்கள் விடுவிக்கப்படும்வரை இந்த வீதியில் கிடந்து மாண்டு போவமே தவிர சற்றும் நகர மாட்டோம் எனவும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.