போரிஸ் ஜோன்சனுக்கு கடன் வழங்கல் விவகாரம்: பிபிசி தலைவர் இராஜினாமா

136 0

பிரித்தானிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவி வகித்த காலத்தில், 2021 பெப்;ரவரியில்

பிபிசியின் தலைவராக நியமிக்கப்பட்டவர் ரிச்சர்ட் ஷார்ப்.

வங்கியாளரான ரிச்சர்ட் ஷார்ப், ஜேபி மோர்கன், கோல்ட்மேன் சாக்ஸ் வங்கிகளில் நீண்டகாலம் பணியாற்றியவர். பிரிட்டனின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக்கும் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியில் ரிச்சர்ட் ஷார்ப்பின் கீழ் பணியாற்றியிருந்தார்.

2020 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு 800,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் கடன் ஏற்பாடு செய்தததில் தனது பங்களிப்பை, பிபிசி தலைவர் பதவிக்கான நியமன நடைமுறைகளின்போது  மறைத்ததாக ரிச்சர்ட் ஷார்ப் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இதை மறைத்ததன் மூலம்,  ரிச்சர்ட் ஷார்ப் விதிமுறைகளை மீறினார் என விசாரணைக்குழுவொன்று கண்டறிந்தது.

இதையடுத்து பிபிசி தலைவர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ரிச்சர்ட் ஷார்ப் இன்று அறிவித்துள்ளார்.