ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீவைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா என சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் ஸ்ரீரங்காவை மே3ம் திகதி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தவேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான திலினி கமகே உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா 2011 இல் வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை 9 ம் திகதி ஜனாதிபதியின் இல்லத்திற்கு இனந்தெரியாத நபர்கள் தீமூட்டியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

