போலி இலக்கத் தகடுகளுடன் வாகனம் செலுத்திய முன்னாள் கடற்படை அதிகாரி கைது!

197 0

போலி இலக்கத் தகடுகளுடன் காரை செலுத்திச் சென்ற ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலனன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட காரின் செஸி மற்றும் எஞ்சின் இலக்கங்கள் அழிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு  கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் மலையகத்தில் உள்ள தனியார் பாதுகாப்பு சேவையொன்றில் உயர் பதவவியை வகிப்பவர் என தெரிய வந்துள்ளது.