கஞ்சாவுடன் 23 வயதுடைய இளைஞர் கைது

197 0

புத்தளம், கருவலகஸ்வெவ பகுதியில் 10 கிலோ கஞ்சாவுடன் 23 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 8 ஆம் இலக்க கட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 10 கிலோ 153 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய நாகவில், பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.