இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் தாக்க முயற்சித்த ஒருவர் இன்று புதன்கிழமை (26) கைது செய்யப்பட்டதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரிடம் இருந்த கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
களுத்துறை, வெலிப்பன்ன நுககஹலந்த பிரதேசத்தில் கத்தியை ஏந்தியவாறு ஒருவர் வன்முறையில் ஈடுபடுவதாக பகல் வேளையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின்படி அப்பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்போது, சந்தேக நபரை கண்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள், அவரிடம் கடுமையாக நடந்து கொண்டதையடுத்து, கையில் வைத்திருந்த கத்தியால் பொலிஸ் அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றுமொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த நபர் சந்தேக நபரின் காதை கடித்து பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

