வரகாப்பொல பிரதான தபால் நிலையத்தில் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான முத்திரைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு யாரோ ஒருவர் ஜன்னலை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 1,70,000 ரூபா பெறுமதியான முத்திரைகளையும் சுமார் 9 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தபால் அதிபர் நேற்று திங்கட்கிழமை (24) வரகாப்பொல பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

