படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறார் மேர்வின் சில்வா

331 0

MERVINமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை தயாரிப்பற்காக அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேர்வின் சில்வாவின் குறித்த திரைப்படத்திற்கு ‘ஜகுவாரா’என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜகுவாரா படத்தின் இயக்குநர் தினேஸ் பிரியசாத் என்பதுடன், குறித்த படத்தின் தயாரிப்பு பணிகளை மேர்வின் சில்வாவே முன்னெடுத்து வருகிறார்.

மேலும் இந்தப் படத்தின் நடிக, நடிகைகள் உள்ளிட்டவர்கள் தெரிவு  செய்யப்பட்டுள்ளதோடு, இதில் பிரதான பாத்திரமான ஜகுவாராவிற்கு உயிர் கொடுக்கும் பாத்திரமாக மேர்வின் சில்வாவின் பாத்திரம் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த படத்திற்கு அப்பால் பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக விளம்பர வேலைத்திட்டம் ஒன்றும் மேர்வின் சில்வாவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.