மலர்ந்திருக்கும் இப்புனித நாளில் முழு உலக அமைதிக்கும் எமது தாய்நாட்டின் நிம்மதியான வாழ்விற்கும் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவிடம் மனமுருகிப் பிரார்த்திப்போம் என இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அருள் நிறைந்த இவ் ரமழான் எமது துயர இருள்களை நீக்கி நாட்டிலே அன்பும் சுபீட்சமும் ஓங்க வழிகாட்டி செல்லட்டும். உலகெலாம் ஈதுல் பித்ரை கொண்டாடும் பல கோடி இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன் சங்கை மிகு இப் பெருநாள் தினத்தில் முழு உலக அமைதிக்கும் எமது தாய்நாட்டின் நிம்மதியான வாழ்விற்கும் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவிடம் மனமுருகிப் பிரார்த்திப்போம்.
புனித நோன்பு எம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளது. அது எமக்கு இறையச்சம் கருணை, பொறுமை,என பல பாடங்களை போதித்துச் சென்றுள்ளது.
இன்று எமது நாடு எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாம் கொண்டுள்ள உயரிய குணவியல்புகள் மூலம் எமது ஒற்றுமை மிக்க தாய்நாட்டை கட்டியெழுப்ப உறுதி பூணுவேண்டும்.
கண்ணியமிக்க ரமழான் மாதத்தில் நாம் எடுத்துக்கொண்ட பயிற்சிகளையும் செய்துவந்த இபாதத்துக்களையும் தொடர்ந்து செய்வதுடன் வசதியற்றிருக்கும் எமது சகோதரர்களை இனங்கண்டு தானதர்மங்களை செய்து இறைவனின் நல்லருளை பெற்ற நல்லடியார்களாக மாறுவோமாக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

