உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இனடம்பெற்று இன்று 21 ஆம் திகதியுடன் 4 வருடங்கள் நிறைவடைவதையிட்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் முதல் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம் வரை காலை 8 மணி முதல் 8.45 மணி வரை மக்கள் கைகோர்த்து அமைதியான முறையில் மனிதச் சங்கிலி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது பலர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இன்று (21) காலை விசேட ஆராதனை இடம்பெற்றது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலைக் குண்டு வெடிப்பு தாக்குதல் இடம்பெற்ற போது கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் வைத்து காயம் அடைந்தவர்களும், சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுடைய உறவினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



