கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நீதி கோரி புத்தளம் புனித அன்னை மரியாள் தேவாலயத்திற்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



குறித்த ஆர்ப்பாட்டத்தில் அருட்தந்தை, ஆயர்கள், அருட்சகோதரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த குண்டு தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களுக்காக திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது. அத்துடன் ஆத்மா சாந்தி பிரார்தனைகளும் இடம்பெற்றன.

ஏப்ரல் குண்டு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த மக்களுக்கு 4 வருடங்கள் கடந்தும் எந்தவொரு நீதிக்கான நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கல்லடவில்லையென்றும் இதற்கான நீதியை பெற்றுத் தராவிட்டால் ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்று அருட்சகோதரி மலர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.




