ஜேர்மன் – கைபுறோன் கந்தசுவாமி ஆலயம் தொடர்பில் வெளியான தகவல்

170 0

”புலம்பெயர் நாடுகளிலும் தாக்கப்படும் ஆலயங்கள்” என்ற தலைப்பில் வெளியான செய்தி குறித்து ஜேர்மன் – கைபுறோன் நகரத்தைச் சேர்ந்த சிலர் மறுப்பு வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர்கள், குறித்த செய்தியை தாம் மறுப்பதாகவும் உண்மை நிலரவம் தொடர்பில் தாம் அறியத்தருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

இச் செய்தியானது உண்மையை திரித்து நீதிக்காக போராடிய கைல்புறோன் வாழ் மக்களை வேதனைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட ஒன்றாகும்.குறித்த சம்பவம் எம் மக்களிற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

அன்று என்ன நடந்தது என்பதனை உலகறிய சொல்வதாயின் கைல்புறோன் கந்தசுவாமி கோவில் எப்படி உருவானது என்பதனையும் இங்கு சுருக்கமாக பார்ப்பது அவசியமாகின்றது.

மக்கள் பணத்தினாலும் மக்களின் அயராத உழைப்பினாலும் 2015 ஆம் ஆண்டு இவ்வாலயம் உருவானது.

ஜேர்மன் கைபுறோன் கந்தசுவாமி ஆலயமனது ஆகம விதிகளை அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டு தெய்வீகமும் ஆன்மீக அழகுற அமைந்த இவ்வாலயத்தின் குடமுழுக்கின் போது அயலூரிலிருந்தும் , அயல்நாடுகளில் இருந்தும் அந்தணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பூஜை புனஸ்காரங்களுக்காம வேதியர் ஒருவர் ஆலய குருவாக நியமிக்கப்பட்டு இதுவரை காலமும் (8 வருடங்களாக) வழிப்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்த வருடம், வருடாந்த உற்சவத்தின் போது தமிழில்தான் பூசைகள் நடத்துவதென ஒரு திடீர் முடிவை நிர்வாகத்தினர் அறிவித்தார்கள்.இந்த முடிவில் நிர்வாக உறுப்பினர்களின் சரியான ஒப்புதல் இன்றி நிறவாக தலைமை எடுத்திருந்தது.

உண்மையில் தலைமையின் இந்த முடிவானது ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு முடிவு என்று கூறவேண்டும்.

தமது இந்த தந்திரோபாய முடிவினை அறிவிக்க, பொது கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திடுந்தது ஆலய நிர்வாகம்.

அந்த கூட்டத்திற்கு அதிகளவிலான பொது மக்கள் கலந்துகொள்ளாத அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த எண்ணிய நிர்வாகத்தினர், தமிழிழ் பூஜை செய்யும் தங்கள் முடிவினை அங்கு தெரிவித்தார்கள்.

வெறும் 20 பேர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தாம் தமிழில் பூஜை செய்யும் முடிவிற்கு ஒப்புதல் கிடைத்ததாகவும் கூறினார்கள்.

இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட 20 பேரில் நிருவாகத்தினர் மற்றும் அவர்களின் நலன் விரும்பிகள் போக மீதம் மூவரே சாதாரண பொது மக்கள் ஆவர்.

ஏறக்குறைய 250 குடும்பங்கள் இந்த நகரத்தில் வாழும் போது வெறும் 20 பேர் சேர்ந்து ஒரு முடிவினை எடுத்த இந்த ஜனநாயக செயலானது இங்கு வாழும் மக்களை ஆத்திரமடைய செய்தது.

ஜனநாயக முறைமைக்கு கொஞ்சமும் பொருத்தமற்ற இம்முடைிவினை தெரிவிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்தார்கள்.

இக்கலந்துரையாடலுக்கு அவர்களே எதிர்பாராத வகையில் பெருந்திரளான மக்கள் வந்திருந்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் தமிழ் பூஜை செய்யும் முடிவினை இன்னும் நான்கு வருடங்களுக்கு தள்ளிப்போடும் படி ஒருமித்த குரலில் வேண்டினர்.

ஏனெனில் ஆகம முறைப்படி அமைதந்து குடமுழுக்கு பெற்ற ஓர் ஆலயமானது மீண்டும் 12 வருடங்களின் பின்னரே குடமுழுக்கு பெறும் என்பதன் அடிப்படையில் 4 வருடங்கள் தாமதிக்கும் படி வேண்டினார்கள். ஆனால் ஆலய நிர்வாகமோ தங்களது முடிவினில் எந்தவித மாற்றத்தினையும் செய்ய மறுத்து விட்டது.

இதன் காரணமாக பல இழுபறி நிலைகள் தோன்றின. வாக்குவாதங்களும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

மக்கள் பணத்தில் மக்களால் மக்களுக்காகவே அமைக்கப்பட்ட ஆலயத்தில் மக்களின் நியாயமான வேண்டுகோள் மறுக்கப்பட்டதால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற மக்களில் ஒருவர் செய்வதறியாது ஆலய ஜன்னல்களுக்கு சிறு சேதங்களை ஏற்படுத்தி விட்டார்.அருள் மிகு கைல்புறோன் கந்தனின் கருணையினால் கைவிட்டுப் போன அந்த ஆலயமாய் மீண்டும் மக்களின் கைகளுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என மேலும் கூறியுள்ளார்.