போதைப்பொருளுக்கு அடிமையானவர் பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி

159 0

ஹெரொயின் போதைப் பொருளுடன் கைதான ஒரு இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து போத்தல் ஒன்றை உடைத்து அதன் மூலம் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய எடுத்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

குருணாகல் பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. சந்தேக நபர் குருணாகல் கல்வல பிதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபராகும்.

காயமடைந்த சந்தேக நபர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.