அக்குறணை அலவத்துகொட பள்ளிவாசலில் குண்டு வெடிக்கும் அபாயம்

165 0

அக்குறணை அலவத்துகொட பள்ளிவாசல் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் அபாயம்  காணப்பட்டதாக பொலிஸாருக்கு நேற்றிரவு (18)  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பை பொலிஸார் ஸ்திரப்படுத்தியுள்ளனர்.

அக்குறணை அலவத்துகொட பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தொலைபேசி தவலையடுத்தே அங்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்படடள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இருப்பினும் இந்த அச்சுறுத்தலை உறுதிப்படுத்தும் வகையில் இதுவரை  எவ்வித  உளவுத் தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை என அலவத்துகொட பொலிஸார் வீரகேசரிக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் தற்போது சாதாரண நிலைமையே காணப்படுவதாகவும் பிரதேசவாசி ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்துள்ளார்.