சிலநிபந்தனைகளின் அடிப்படையில் அரசியலில் ஈடுபட தயார் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனகரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களையும் வலுப்படுத்தும் ஊக்கப்படுத்தும் இலங்கையை சிறந்த நாடாகமாற்றும் சிறந்த திட்டத்தை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்ததல் நான் அதனை ஏற்க தயார் என அவர் எக்கனமி நெக்ஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சிறந்த நிர்வாகத்தையும் பக்கச்சார்பற்ற செயல்திறன் மிக்க தனிநபர்களையும் எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலஅரசியல்வாதிகளும் உயர்குழாமை சேர்ந்த குடும்பத்தினரும் கடந்த 75 வருடமாக மக்களின் வாழ்க்கையில் விளையாடிவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆகவே அனைவரினதும் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொள்வதற்கு நான் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் காஞ்சனவிஜயசேகரவுடன் தனிப்பட்ட பகை எதுவுமில்லை என தெரிவித்துள்ள ஜனகரட்நாயக்க ஜனாதிபதி பொதுத்தேர்தலின் போது சிறந்த உறவுகளை கொண்டிருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

