இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டு சென்ற மூன்று ஆடுகள் நெல்லியடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நேற்று (16) பிற்பகல் 4 மணியளவில் குறித்த மூன்று ஆடுகளும் துன்னாலை குடவத்தை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த ஆடுகள் தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் நெல்லியடி பொலிசாருக்கு கிடைக்கவில்லை என்று உரியவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸாரால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



