ஜி.எல்.பீரிஸிற்கு மொட்டு கட்சி அழைப்பு?

167 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியை பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசுக்கு மொட்டு கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து டலஸ் தரப்புடன் இணைந்து பீரிசும் வெளியேறினார்.

சுதந்திர மக்கள் சபை எனும் கட்சியை உருவாக்கி தற்போது அதில் செயற்பட்டுவருகின்றனர்.

இதனால் தவிசாளர் பதவியில் இருந்து பீரிஸ் நீக்கப்பட்டுவிட்டார் என மொட்டு கட்சி அறிவித்திருந்தது.