ஹெம்மத்தகம, தர வங்குவ என்ற இடத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகளும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளனர்.
காரின் சாரதி வத்தளை பிரதேசத்தை சேர்ந்த நபர் எனவும், விபத்தில் காயமடைந்த 30 வயது பெண் கம்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர் அவுஸ்திரேலியாவின் சிட்னியை வசிப்பிடமாக கொண்டிருந்த 67 வயது நபர் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

