இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்ற ‘கசிப்பு ரொஷான்’ சுட்டுக்கொலை

71 0

காலி, தடல்ல பகுதியில் நேற்று (15) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு அருகில் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தடல்ல, மகா முதலி மாவத்தையைச் சேர்ந்த கசிப்பு ரொஷான் எனப்படும் 37 வயதுடைய நோரகல் ரொஷான் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காலி, தடல்ல பிரதேசத்தில் புத்தாண்டு விழாவும், அதைத் தொடர்ந்து இரவு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. குறித்த நபர் இரவு 10 மணியளவில் அந்த நிகழ்ச்சியை பார்க்க வந்துகொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியால் அந்த நபரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து  கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.