இந்தியாவின் வளர்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது – சீனா எச்சரிக்கை

228 0

இந்தியா வேகமான பொருளாதார்ர வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், இதை சீனா சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என சீனாவின் தேசிய நாளிதழான, ‘குளோபல் டைம்ஸ்’ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, தயாரிப்புத் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. அதன் விளைவாக, கடந்த ஜனவரியில், இந்தியா, சீனாவுக்கு மேற்கொண்ட ஏற்றுமதி, 42 சதவீதம் உயர்ந்துள்ளது. இரு நாடுகளின், 7,000 கோடி டாலர் பரஸ்பர வர்த்தகத்தில், திடீரென்று, இந்தியாவின் பங்களிப்பு, 4,600 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் வளர்சியை சீன பொருளாதார ஆய்வாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு அலட்சியமாக இருப்பது, உள்நாட்டு தயாரிப்புத் துறைக்கு ஆபத்தாக முடியும். இந்தியாவில், தயாரிப்புத் துறையில் போட்டி அதிகரித்து வருகிறது. அதையும், சீனா கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. இந்தியா குறித்து, மேம்போக்கான மனோபாவத்தை, சீனா தொடர்ந்து கடைபிடித்தால், அது, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

சீனாவுக்கு போட்டியாக, ஆணி முதல், விமானம் வரை அனைத்து துறைகளிலும், இந்தியா உடனடியாக வளர்ச்சி பெற முடியாது. இருந்த போதிலும், இந்திய தயாரிப்புகளால் அதிகரித்து வரும் போட்டியை, சீனா உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.