இலங்கை வந்திருக்கும் இந்தியாவின் பிரபல நடிகர் யாஷ்

93 0

இந்தியாவின் பிரபல நடிகரான யாஷ் என அறியப்படும், நவீன் குமார் கவுடா இலங்கைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் தினேஸ் வீரக்கொடியை அவர் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான  ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம்  நடிகர் யாஷ் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர்.

சந்திப்பின் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட தினேஷ் வீரக்கொடி, மூன்று ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்ற நடிகர், தனது சில திரைப்பட படப்பிடிப்புகளுக்கு இலங்கையைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.