பெண்கள் மீதான தடை: ஆப்கான் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருக்க ஐநா அறிவுறுத்தல்

149 0

ஆப்கானிஸ்தானிலுள்ள ஐநா அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமுகம் அளிக்க வேண்டாம் என ஐநா அறிவுறுத்தியுள்ளது.

தொண்டர் நிறுவனங்களில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான் தடை விதித்துள்ளதையடுத்து. ஐநா இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஐநா அலுவலகங்களில் பணியாற்றும் ஆப்கானிஸ்தான் ஆண்கள் பலர், பெண் சகாக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கடந்த வாரம் அலுவலகங்களுக்கு செல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலுள்ள தமது ஊழியர்களான ஆண்கள், பெண்கள் எவரும் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் செயற்படுவதா என்பது குறித்து பரிதாபகரமான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது என ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் ஸ்;தாபனங்களில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பணியாற்றுவதற்கு கடந்த டிசெம்பர் இறுதியில் தலிபான்கள் தடை விதித்தனர்.

இத்தடையை ஐக்கிய நாடுகளுக்கும் இம்மாத ஆரம்பத்தில் தலிபான்கள் நீடித்தனர்.