போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

123 0

அம்பாந்தோட்டை, கட்டுவன பகுதியில் 5,000 ரூபாய் பெறுமதியான 17 போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கட்டுவன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிந்தென்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 5,000 ரூபாய் பெறுமதியான 17 போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது கட்டுவன பிரதேசத்திலுள்ள நபர் ஒருவர் மூலம் தனக்கு குறித்த போலி நாணயத்தாள்கள் வழங்க்கட்டதாக தெரிவித்ததையடுத்து குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேக நபரின் வீடு சோதனை உட்படுத்தப்பட்டதோடு  அங்கிருந்து போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரம் மற்றும் மடிக்கணினி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 38 வயதுடைய கடுவன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.