மாந்தை உப்புக் கூட்டுத்தாபன தலைவருக்கு  பதியுதீன் உத்தர வு

337 0

 

மன்னார் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கியதன் பின்னரே அவற்றை ஏனையவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கையெடுக்குமாறு கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும் ,மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான றிசாத் பதியுதீன் மாந்தை உப்புக் கூட்டுத்தாபன தலைவருக்கு  உத்தரவிட்டார்.

மன்னார் மாவட்ட மீனவ சமாசத்தினரால் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கையாக மாந்ரத உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.அமீனுக்கு இந்த உத்தரவினை அமைச்சர்  பிறப்பித்தார்.

மன்னார் மீனவ சமாசத்திற்கு மாதமொன்றுக்கு தேவையான உப்பின் அளவினை மதீப்படு செய்து அதனை உறுதிப்படுத்தி மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அதனடிப்படையில்  உப்பு விநியோகத்தில் முன்னுரிமையினை மன்னார் மாவட்ட மீனவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கையெடுக்குமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அதேவேளை போதுமான அளவு உப்பு கையிறுப்பில் உள்ளதாகவும் அமைச்சரின் பணிப்புரைக்கமைய இதனை நடைமுறைப்படுத்த தாம் தயாராகவுள்ளதாக மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமீன் குறிப்பிட்டுள்ளார்.