இளம் கைதிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர்

63 0

சிறைச்சாலையிலுள்ள 12 இளம் கைதிகளின் பாதங்களை பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் நேற்று கழுவி முத்தமிட்டார்.

வறிய மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்துவரும் பாப்பரசர் பிரான்சிஸ், பெரிய வியாழனை முன்னிட்டு, ரோம் நகரிலுள்ள இளம் கைதிகளின் சிறைச்சாலையொன்றுக்கு விஜயம் செய்தார்.

அங்கு 12 இளம் கைதிகளின் பாதங்களை பாப்பரசர் பிரான்சிஸ் கழுவியதுடன் அப்பாதங்களை முத்தமிட்டார்.

 

பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசப்பிரச்சினைகள் காரணமாக கடந்த வாரம் 3 தினங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.