களுபோவில வைத்தியசாலைக்கு புறம்பமாக கொண்டுவரப்படும் அடையாளம் காணப்படாத மற்றும் உரிமைகோரப்படாத பிரதேங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என களுபோவில வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கிறது.
இவ்விடயம் குறித்து கல்கிஸ்சை மற்றும் நுகேகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் விடுத்துள்ளதாக களுபோவில வைத்தியசாலை நிர்வாகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
களுபோவில வைத்தியசாலையின் பிரதே அறையில் 36 பிரேதங்களை மாத்திரமே வைக்கக்கூடிய இடவசதி காணப்படுவதுடன், களுபோவில வைத்தியசாலைக்கு புறம்பமாக கொண்டுவரப்பட்ட 28 பிரேதங்கள் கடந்த 14 மாதங்களாக பிரேத பரிசோதனைகள் எதுவும் நடத்தப்படாது இருப்பதனாலேயே களுபோவில வைத்தியசாலை நிர்வாகம், இந்த தீர்மானத்தை எடுத்ததாக குறிப்பிடுகின்றது.
இவ்வாறு வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டுவரப்படும் அடையாளங் காணப்படாத மற்றும் உரிமைகோரப்படாத பிரதேங்கள் தொடர்பாக, பொலிஸார் உரிய விசாரணைகளை நடத்தமால் அசமந்தமாக செயற்படுவதே இதற்கு காரணம் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கிறது.
இதன் காரணமாக, கடந்த 6 ஆம் திகதி முதல் களுபோவில வைத்தியசாலைக்கு புறம்பமாக கொண்டுவரப்படும் அடையாளங் காணப்படாத மற்றும் உறவினரற்ற சடலங்களை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக களுபோவில வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

