டுவிட்டருக்கு திரும்பிய ‘நீலப் பறவை’ – மீண்டும் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்!

84 0

டுவிட்டர் நிறுவனத்தின் நீலப் பறவை லோகோ சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்டது. அனைவருக்கும் நன்கு பழகிப் போன டுவிட்டர் லோகோ டாகி-காயின், அதாவது ஷிபா இனு லோகோ-வாக மாற்றப்பட்டது. தற்போது டாகி-காயினுக்கு பதில் மீண்டும் பழையபடி நீலப் பறவை லோகோ மாற்றப்பட்டுவிட்டது. அடிக்கடி டுவிட்டர் லோகோ மாற்றப்படுவதற்கான கராணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. டாகி-காயின் முதலீட்டாளர்கள் எலான் மஸ்க்-கிற்கு எதிரான வழக்கு தொடர்ந்ததே இந்த முடிவுக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. முட்டாள்கள் தினத்தை ஒட்டி எலான் மஸ்க் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எந்த காரணமாக இருந்த போதிலும், டுவிட்டர் தளத்தில் தற்போது மீண்டும் நீலப் பறவை லோகோ வழங்கப்பட்டு விட்டது.

டுவிட்டரை ரிலோட் செய்யும் போது பழையபடி நீலப் பறவை லோகோ திரையில் தோன்றுகிறது.   சில நாட்களுக்கு முன்பு தான் டுவிட்டர் நிறுவன லோகோ மாற்றுவதவாக எலான் மஸ்க் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். டுவிட்டர் லோகோவுக்கு மாற்றாக டாகி-காயின் லோகோ இடம்பெற்றது. மூன்று நாட்களுக்கு டுவிட்டர் லோகோ டாகி-காயினாக இருந்த நிலையில், தற்போது டுவிட்டர் தளத்தில் மீண்டும் நீலப் பறவை லோகோ காணப்படுகிறது.

டுவிட்டர் தளத்தின் லோகோ அதன் வெப் வெர்ஷனில் மட்டுமே மாற்றப்பட்டது. டுவிட்டர் மொபைல் வெர்ஷனில் நீலப் பறவை லோகோ மாற்றப்படாமலேயே இருந்தது. டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து, இதனை லாபகரமாக மாற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

44 பில்லியன் டாலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க். தற்போது அதன் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாக குறைந்துவிட்டது.