கேப்பாபுலவில் கொட்டும் மழைக்கும் மத்தியில் தமது பூர்வீக நிலம் கோரி இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்திலீடுபடுகின்றனர்
இந்நிலையில் போராட்டத்திலீடுபடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் எத்தகைய அச்சுறுத்தலை விடுத்தும் எமது போராட்டத்தை நிறுத்திவிட முடியாது சொந்த மண்ணில் கால் பாதிக்கும் வரை எமது மண்மீட்பு போர் தொடருமென தெரிவித்தனர்

