நாரஹேன்பிட்டி எல்விட்டிகல மாவத்தையில் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஏனைய ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட வீடு ஒன்றை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினர், போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களைக் கைப்பற்றியதுடன் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
போலியாக தயாரிக்கப்பட்ட 20 சாரதி அனுமதிப்பத்திரங்கள், 7 வங்கி அட்டைகள், 11 பல்வேறு அட்டைகள், 3 வருமான அனுமதிப்பத்திரங்கள், கணினி அமைப்பு மற்றும் போலி அனுமதிப்பத்திரம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி இந்த சோதனைமேற்கொள்ளப்பட்டது.

