இலங்கைக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சர்வதேச சட்டத்தரணிகள்!

225 0

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லுமாறு சர்வதேச சட்டத்தரணிகளான ரிசர்ட் ரொஜர்ஸ் மற்றும் எக்மிரா லனு என்பவர்கள் மனித உரிமை பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமை பேரவையில் உரையாற்றியதனை தொடர்ந்து சில மணித்தியாலங்களின் பின்னர் தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். நாட்டிற்கு வெளியே ஈழ அரசாங்கம் என்ற பெயர் கொண்ட அமைப்பு இந்த சட்டதரணிகளை ஜெனிவாவுக்கு அழைத்துள்ளதாக ஜெனிவா தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினால் யுத்த குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி இந்த இரண்டு சட்டதரணிகள் 31 பக்கத்திலான அறிக்கையை மனித உரிமை பேரவையிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இலங்கை அரசாங்கம் தங்கள் பாதுகாப்பு படையினரை மீள் சீர்த்திருத்தம் மேற்கொள்ளவில்லை என இவர்கள் மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.