புத்தளம் கால்வாய் ஒன்றில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் கண்டுபிடிக்கப்படும் போது மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.
நீதவான் விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் ஆரம்ப மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புத்தளம் காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

